dark_mode
Image
  • Friday, 29 November 2024

கட்சி மாறும் முக்கிய "தலை.." மகாராஷ்டிரா தேர்தலில் இதுதான் கேம் சேஞ்சர்.. சரத் பவார் போடும் பிளான்

கட்சி மாறும் முக்கிய

மகாராஷ்டிராவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த மிக முக்கிய தலைவர் ஒருவர் தங்கள் கட்சியில் சேரவுள்ளதாக சரத் பவார் என்சிபி தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், மகாராஷ்டிர தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்த்துவோம் என்றும் சரத் பவார் தரப்பு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக கூட்டணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

அங்கே எதிர்க்கட்சிகள் கூட்டணியில் காங்கிரஸ், தாக்ரே சிவசேனா மற்றும் சரத் பவார் என்சிபி ஆகிய கட்சிகள் உள்ளன. அங்கு வரும் நவ. மாதம் தேர்தல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

சரத் பவார் தரப்பு: இதற்கிடையே சரத் பவாரின் என்சிபி தரப்பு சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளது. அதாவது மகாராஷ்டிராவில் சில வாரங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், வேறு ஒரு கட்சியில் இருக்கும் மிக முக்கிய தலைவர் ஒருவர் தங்கள் கட்சியில் இணைய உள்ளதாக என்சிபி சரத் பவார் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்தார். அங்கு சில வாரங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், இது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அதேநேரம் யார் அந்த தலைவர்.. எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறித்த தகவல்களைப் பகிர ஜெயந்த் பாட்டீல் மறுத்துவிட்டார். இது ஒரு பக்கம் இருக்க மகாராஷ்டிராவில் தேர்தல் நெருங்கும் நிலையில், பல தலைவர்கள் சரத் பவார் என்சிபி கட்சியில் இணைய ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அக்கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மகாராஷ்டிர அரசியல்: மகாராஷ்டிராவில் இப்போது ஷிண்டே முதல்வராக இருக்கிறார். அங்கு பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி ஆட்சியில் உள்ளன. இந்த அரசு செயல்பட்ட விதம் குறித்து மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுவதாக சரத் பவார் தரப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சரத் பவார் தரப்பு என்சிபி செய்தித் தொடர்பாளர் மகேஷ் தபசே கூறுகையில், "தற்போதுள்ள என்டிஏ கூட்டணி ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். நான் அடித்துச் சொல்கிறேன் இந்த கூட்டணி மகாராஷ்டிர தேர்தலில் 100 சீட்களுக்கு மேல் பெறாது.

கடும் அதிருப்தி: மத்திய அரசு மீது மகாராஷ்டிர மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த எதிர்ப்பு வெளிப்படையாகவே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அந்த தலைவர்கள் வரும் போது இந்த எதிர்ப்பு அதிகரிக்கவே செய்கிறது. இந்த தேர்தலில் அவர்கள் எத்தனை சதவிகித வாக்குகள் வாங்குகிறார்கள் என்பதைப் பார்த்தாலே இது உங்களுக்குப் புரியும். என்னைக் கேட்டால் குறைந்தது 10% வரை அவர்கள் வாக்கு வங்கி குறையும்.

மேலும், உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாரின் எம்எல்ஏக்களை தங்கள் வசப்படுத்தி அரசியலமைப்பிற்கு விரோதமான கூட்டணியை மகாராஷ்டிராவில் உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாகவும் மகாராஷ்டிர மக்கள் பாஜக மீது கடும் கோபத்தில் உள்ளனர்" என்றார்.

கட்சி மாறும் முக்கிய

comment / reply_from

related_post

newsletter

newsletter_description