உசிலம்பட்டியில் களைகட்டிய டி.எம்.சௌந்தர்ராஜன் நூற்றாண்டு விழா.!!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு கிராமத்தில் மறைந்த பின்னணி இசை பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் இசைப்போட்டி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலிருந்து 100க்கும் அதிகமான ஒலிப்பெருக்கி அமைப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூம்பு வடிவ ஒலிபெருக்கி மூலம் பாரம்பரிய முறைப்படி கிராமபோன் ரெக்கார்டு மூலம் பழைய டிஎம்எஸ், சீர்காழி கோவிந்தராஜன் பாடல்களை ஒலிக்க வைத்து போட்டிகளை நடத்தினர்.
இதுகுறித்து ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் சங்க உறுப்பினர், கடந்த 5 ஆண்டுகளாக இசை பாடகர் டிஎம் சௌந்தர்ராஜனின் நினைவாக இதுபோன்ற போட்டிகள் நடைபெற்று வருவதாகவும், ஒலிப்பெருக்கி தொழில் நலிவடைந்து வருவதாகவும், வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுவதாகவும் கூறினார். மேலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையும், கோப்பைகளும் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.