இன்று முதல் உதவி பேராசிரியருக்கான SET தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!

உதவி பேராசிரியர் பணியிடங்களில் சேருவதற்கான செட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணியாற்ற நடத்தப்படும் SET என்ற மாநில தகுதித் தேர்வு குறித்து அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஜூலை 7 ஆம் தேதி வரை www.tnsetau.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள இப் பல்கலைக்கழகம், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் குறையாதபட்சத்தில் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 நகரங்களில் செட் தேர்வு நடைபெறுகிறது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description