அரசு நலவழித்துறை சார்பாக அரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத் திருவிழா..!
புதுச்சேரி அரசு நலவழித்துறை சார்பாக அரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார அளவிலான சுகாதாரத் திருவிழா நடைபெற்றது. இதில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான சிறப்பு சிகிச்சைகள், பிறந்த குழந்தைகள் முதல் அனைத்து குழந்தைகளுக்கான உடல்நல பரிசோதனைகள், இளம்வளர் பருவத்தினருக்கான சிறப்பு ஆலோசனைகள், 30 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கான மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பல் மருத்துவம், கண் மருத்துவம், தொற்றா மருத்துவம், தற்காலிக/ நிரந்தர குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைகள், ஆயுர்வேத மருத்துவம், பாரத பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் பதிவு செய்தல் மற்றும் யோகா பயிற்சிகள் நடைபெற்றன.
மாண்புமிகு வேளாண் துறை அமைச்சர் திரு க. ஜெயக்குமார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் திரு இ. வல்லவன், இ.ஆ.ப., சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் ஆனந்தலட்சுமி, செய்தி, தொடர்பு மற்றும் கல்விப் பிரிவு துணை இயக்குனர் டாக்டர் ரகுநாதன் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்