அய்யம்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மக்கள் சங்கமம் மாநாடு
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை மேல வாணியர் தெருவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சியின் சார்பில் மக்கள் சங்கமம் மாநாடு
மாவட்ட தலைவர் குலாம் உசேன் தலைமையில் நடைபெற்றது முன்னதாக கலை நிகழ்ச்சி உடன்
கலைநிகழ்ச்சியுடன் மாநாடு துவங்கப்பட்டது. இந்த மாநாட்டில் தேசிய பொது செயலாளர் முகம்மது பாருக், மாநில பொது செயலாளர் முகைதீன் அப்துல் காதர், திருச்சி மண்டல தலைவர் அமீர் பாஷா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மாநாட்டில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏற்படுத்த வேண்டும், தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பல முக்கிய நகரங்களை இணைக்கக்கூடிய மற்றும் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் நெடுஞ்சாலை என்பதால் இந்த தேசிய நெடுஞ்சாலை மற்ற தேசிய நெடுஞ்சாலைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கொடுத்து தரம் உயர்த்த அரசு ஆவணம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் காவல்துறை கண்காணிப்பாளர் பூரணி தலைமையிலான போலிசார் செய்திருந்தனர்.