அதிமுக மாஜி புள்ளிகளை தூக்கும் தவெக விஜய்! அவரும் வர்றாரா? எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! பரபர

சென்னை: தமிழக வெற்றி கழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனா இணைந்திருக்கும் நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஓபிஎஸ் மகனான ரவீந்திரநாத் அதிமுகவில் இணையலாம் என தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் பரபரப்பாக இருக்கிறது தமிழக அரசியல் களம். நடிகராக இருந்து தற்போது அரசியல்வாதியாக மாறி இருக்கும் விஜய் தனது கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கட்சி ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது மாவட்ட செயலாளர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது.
நான்கு கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இன்னும் சுமார் 60 மாவட்ட செயலாளர்கள் பெயர் பட்டியல் வெளியாக உள்ளது. இதற்கு இடையே பல முக்கிய புள்ளிகள் அதிமுகவில் இணைந்து இருக்கிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்த ஆதவ் அர்ஜுனா, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், யூட்யூபரும் பிரபல பேச்சாளருமான ராஜ்மோகன், ஆகியோர் தவெகவில் இணைந்ததோடு பதவியையும் பெற்றிருக்கின்றனர். முன்னதாக அதிமுகவில் இணைவதோடு தேர்தல் பணிகளையும் மேற்கொள்ள ஆதவ் அர்ஜுனா பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பதவி வழங்குவது தொடர்பாக இழுத்தடித்து வந்ததால் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணைந்து இருக்கிறார். மேலும் அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகியான சிடிஆர் நிர்மல் குமாரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வைத்துள்ளார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி தரும் வகையில் பல அதிமுக புள்ளிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் குமாரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என ரவீந்திரநாத் முகநூலில் பதிவிட்டு இருந்தார். அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதற்கான சமிக்ஞை தான் அது என்கின்றனர்.
அது மட்டும் அல்லாமல் புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட சில அதிமுக மாஜிகளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்த ஓ.பன்னீர்செல்வம் பாஜக ஆதரவாளராக இருக்கிறார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற இயக்கத்தை தொடங்கி இருக்கும் அவர் மீண்டும் அதிமுகவில் இணைய மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரிந்தவர்களை கட்சியில் இணைக்க முடியாது என திட்டவட்டமாக இருக்கிறார்.
இதனால் ஓ.பன்னீர்செல்வத்துடன் பயணிப்பது தங்களது அரசியல் வாழ்வை கேள்விக்குறியாக்கும் என நினைக்கும் முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவெடுத்துள்ளனர் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அடுத்தடுத்த நாட்களில் தமிழக வெற்றிக் கழகத்தில் பல முக்கிய புள்ளிகள் தங்களை இணைத்து கொள்வார்கள் என்பதே தற்போது பேசு பொருளாக உள்ளது.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description