அக்டோபர் மாதத்தில் 15 நாட்கள் வங்கி விடுமுறை அறிவிப்பு!
வங்கிகள் செயல்படும் நாட்கள், விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி முந்தைய மாதத்தில் அறிவித்து வருகின்றன. இதன் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிப் பணிகளை திட்டமிட்டு கொள்ளலாம். நவராத்திரி விடுமுறை பண்டிகை காலமாக இருப்பதால் சப்தமி, அஷ்டமி மற்றும் தசரா என நாட்டின் பல பகுதிகளில் குறைந்தது 3 முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எனவே, எந்தவொரு சிரமத்தையும் தவிர்க்க தனிநபர்கள் இந்த விடுமுறை நாட்களில் தங்கள் நிதிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக, நாடு முழுவதும் உள்ள வங்கிகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் , 2 வது மற்றும் 4 வது சனிக்கிழமைகள் என வார இறுதி நாட்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் இந்த பட்டியலில் திருவிழாக்கள், தேசிய விடுமுறைகளும் இடம்பெற்றுள்ளது.
அக்டோபர் மாத வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல்
அக்டோபர் 1, 2024 : செவ்வாய் : மாநில சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் ( ஜம்மு)
அக்டோபர் 2 , 2024 : புதன் கிழமை : காந்தி ஜெயந்தி/மஹாலய அமாவாசை
அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத் - ஆந்திரா மற்றும் தெலுங்கானா, இம்பால், இட்டாநகர், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, கோஹிமா, லக்னோ, மும்பை , நாக்பூர், புது தில்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம்
அக்டோபர் 3 , 2024 : வியாழக்கிழமை : நவராத்ர ஸ்தாப்னா ஜெய்ப்பூர்
அக்டோபர் 6 , 2024 : ஞாயிற்றுக்கிழமை : வார விடுமுறை
அக்டோபர் 10, 2024 : வியாழக்கிழமை : துர்கா பூஜை/தசரா (மகா சப்தமி) அகர்தலா, குவஹாத்தி, கோஹிமா மற்றும் கொல்கத்தா
அக்டோபர் 11, 2024 : வெள்ளிக்கிழமை : தசரா/ஆயுத பூஜை/துர்கா பூஜை அகர்தலா, பெங்களூரு, புவனேஸ்வர்,தமிழகம், காங்டாக், குவஹாத்தி, இம்பால், கோஹிமா, கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி
அக்டோபர் 12, 2024 : 2வது சனிக்கிழமை
அக்டோபர் 13, 2024 : ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 14, 2024 : திங்கட்கிழமை துர்கா பூஜை (தாசைன்) காங்டாக்
அக்டோபர் 16, 2024 : புதன் கிழமை : லட்சுமி பூஜை அகர்தலா மற்றும் கொல்கத்தா
அக்டோபர் 17, 2024 : வியாழக்கிழமை மகரிஷி வால்மீகி ஜெயந்தி/கடி பிஹு ( பெங்களூரு, கவுகாத்தி மற்றும் சிம்லா)
அக்டோபர் 20, 2024 : ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 26, 2024 : 4 வது சனிக்கிழமை
அக்டோபர் 27, 2024 : ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 31, 2024 : வியாழக்கிழமை
தீபாவளி (தீபாவளி)/காளி பூஜை/சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள்/நரக சதுர்தசி அகமதாபாத், ஐஸ்வால், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத் - ஆந்திரா மற்றும் தெலுங்கானா, இட்டாநகர், ஜெய்ப்பூர், கான்பூர், கொச்சி, கோஹிமா, கொல்கத்தா, லக்னோ, புது தில்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் திருவனந்தபுரம்
இந்த விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் அதே நேரத்தில் இந்த நாட்களில் வாடிக்கையாளர்கள் UPI, மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் பேங்கிங் சேவைகள் வழக்கம் போல் செயல்படும். இந்தச் சேவைகளில் ஏதேனும் மாற்றம் அல்லது இடையூறு ஏற்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.