dark_mode
Image
  • Friday, 07 March 2025

2025ம் ஆண்டின் முதல் நாளில் வணிக சிலிண்டர் விலை சரிவு

2025ம் ஆண்டின் முதல் நாளில் வணிக சிலிண்டர் விலை சரிவு

ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான இன்று (ஜன.,01), வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்து ரூ.1,966க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று (ஜன.,01) ஆண்டின் முதல் நாளில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்து ரூ.1,966க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.818.59 ஆக நீடிக்கிறது. கடந்த 3 மாதங்களாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்ந்து வந்த நிலையில், இந்த மாதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2025ம் ஆண்டின் முதல் நாளில் வணிக சிலிண்டர் விலை சரிவு

comment / reply_from