dark_mode
Image
  • Sunday, 24 August 2025
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வரும் 21, 22ஆகிய நாட்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பனிக்காலத்தில் இருந்து கோடைக்காலத்திற்கு காலநிலை மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கோடை காலம் தொடங்கிவிட்டாலும் கூட பனிப்பொழிவு இப்போதும் கடுமையாக உள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக எல்லாமும் சாத்தியம் என்பது போல் இன்றைய வானிலை உள்ளது. அதனால் தான் மழையே பெய்யாத கார்த்திகை மாதம் இந்த முறை தமிழகத்தில் கனமழை பெய்தது.

இந்நிலையில் வளிமண்டல சுழற்றி காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அதே போல் வரும் 21,22ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பிற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். பெரும்பாலும் இந்த காலகட்டத்தில் மழை பொழிவு இருக்காது. ஆனால் இந்த வானிலை அறிவிப்பு ஆச்சர்யமாக உள்ளது.

related_post