
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.13 மற்றும் 14ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் 15 மற்றும் 16ம் தேதிகளில் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் லேசான மழை பெய்யும் என அறிவிக்க்ப்பட்டுள்ளதுசென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 75.2 பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என மேலும் வானிலை மையம் அறிவித்துள்ளது.