
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
தென் தமிழக கடலோர பகுதிகளில் 1 கி.மீ உயரத்திற்கு நிலவும் வளி மண்டல சுழற்சியால் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 23, 24 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.