16 கோடி மதிப்பில் புதுப்பாலம் வெள்ளத்தில் சேதம்: அதிகாரிகள் அலட்சியம் காரணம் - எடப்பாடி பழனிச்சாமி
தென்பெண்ணெய் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட அகரம் பள்ளிப்பட்டு தொண்டமானூர் மேம்பாலம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு
நீர்வளத்துறை அதிகாரிகள் பேச்சை கேட்காமல் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் எடுத்தோம் கவிழ்த்தோம் என பாலம் கட்டியதின் விளைவாக பாலம் சேதம் அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு தாலுகாவிற்கு உட்பட்ட அகரம் பள்ளிப்பட்டு தொண்டைமானூர் இடையே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு 16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் கடந்த இரண்டாம் தேதி நள்ளிரவில் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது இதனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்
அப்பொழுது பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் கடந்த 1972 ஆம் ஆண்டு சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அதனை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் நெடுஞ்சாலை துறையினர் பாலம் கட்டியிருக்க வேண்டும் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தால் பொழுது நீர்வளத்துறை அதிகாரிகள் பாலத்தை இன்னும் உயர்த்தி கட்ட வேண்டும் என கூறியதாக கூறப்படும் நிலையில் நெடுஞ்சாலை துறையினர் அலட்சியமாக எடுத்தோம் கவிழ்த்தோம் என ஒரு லட்சம் கன அடி நீர்வரத்து செல்லும் அளவிற்கு மட்டுமே காலத்தை கட்டி உள்ளனர் இதனால் கடந்த இரண்டாம் தேதி 2 லட்சம் கன அடி தண்ணீர் சென்றதால் பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க அரசினுடைய குறைபாட்டின் காரணமாகவும் துறையினுடைய குறைபாட்டின் காரணமாகவும் மக்களின் வரிப்பணம் 16 கோடி ரூபாய் வீணாகி உள்ளதாக குற்றச்சாட்டினார்