📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 28-09-2023 வெள்ளிக்கிழமை

*தினம் ஓர் ஹதீஸ் 📚*
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பாயால் ஒரு சிறிய அறையை அமைத்துக்கொண்டார்கள்- சில இரவுகள் (அதனைத் தடுப்பாக வைத்துக்கொண்டு) அதனுள் தொழுதார்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதனர். அவர்கள் (தம்மைப் பின் பற்றித் தொடர்ந்து தொழுவது) பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிந்தபோது (அந்த இடத்திற்கு வராமல் தம் இல்லத்திலேயே) அமர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். பின்பு (மக்களை நோக்கி) அவர்கள் புறப்பட்டு வந்து உங்களது செயல்களை நான் கண்டறிந்தேன். மக்களே! (உபரியானத் தொழுகைகளை) உங்கள் வீடுகளிலேயே தொழுதுகொள்ளுஙகள்.ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும். ஆனால் கடமையாக்கப்ட்ட தொழுகையைத் தவிர! என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
ஸஹீஹ் புகாரி : 731.
அத்தியாயம் : 10. பாங்கு

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description