📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 18-11-2022 வெள்ளிக்கிழமை
பாங்கு (அதான்) என்றால் என்ன?
தொழுகை நேரங்கள் வந்ததும் மக்களை தொழுகைக்காக அழைக்கும் அழைப்பை, அரபு மொழியில் ‘அதான்’ என்றும் பாரசீக மொழியில் ‘பாங்கு’ என்றும் கூறப்படும். தமிழிலும் பாங்கு என்றே சொல்லப்படுகிறது. தொழுகைக்கு முன்னால் பாங்கும், இகாமத்தும் சொல்வது சுன்னத்து, பர்ளுத் தொழுகைக்கும், விடுப்பட்ட (கழா) தொழுகைக்கும் தனியாகவோ, கூட்டாகவோ தோலும் போது பாங்கும், இகாமத்தும் சொல்வது நன்று.