📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 16-11-2022 புதன்கிழமை
சூரத்துல் ஆதியாத் – 100 (வேகமாக ஓடக்கூடியவை)
(மக்கீ) பிரிவு - 1, சொற்கள் – 40, வசனங்கள் – 11, எழுத்துகள் – 163
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
1. மூச்செறிந்து வேகமாக ஓடுகின்ற குதிரைகளின் மீது சத்தியமாக!
2. பிறகு குளம்பை அடிப்பதால் தீப்பொறி பறக்கச் செய்கின்ற குதிரைகளின் மீதும்:
3. பின்னர் அதிகாலையில் (எதிரிகள் மீது) பாய்ந்து செல்கின்ற குதிரைகளின் மீது:
4. பிறகு அங்கு புழுதியை கிளப்புபவை மீதும்:
5. பின்னர் அதனுடன் (அப்புழுதியுடன் எதிரிகளின்) கூட்டத்தின் நடுவில் புகுந்து செல்பவற்றின் மீதும் (சத்தியமாக!)
6. நிச்சயமாக மனிதன் தன்னுடைய ரப்புக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.
7. மேலும் நிச்சயமாக அவனே அதன் சாட்சியாகவும் இருக்கிறான்.
8. இன்னும் நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் மிகக் கடுமையாக இருக்கிறான்.
9. அவன் அறிந்துக்கொள்ள வேண்டாமா? கபுருகளில் உள்ளவை எழுப்பப்படும் போது –
10. நெஞ்சங்களில் உள்ளவையும் வெளியாக்கப்படும்போது –
11. நிச்சயமாக அவர்களுடைய ரப்பு அவர்களைப் பற்றி அந்நாளில் நன்கு தெரிந்தவனாக இருக்கிறான். (என்பதை அவன் அறிந்துக்கொள்ள வேண்டாமா?)