📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 11.10.2021 திங்கட்கிழமை

முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார்.
இப்ராஹீம்(ரலி) மரணித்த நேரத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது.
'இப்ராஹீமின் மரணத்திற்காகக் கிரகணம் ஏற்பட்டது' என்று மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரண்டு அத்தாட்சிகளாகும். எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே நீங்கள் கிரகணத்தைக் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அது விலகும் வரை தொழுங்கள்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1060.
அத்தியாயம் : 16. கிரகணங்கள்

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description