📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 09-11-2021 செவ்வாய்க்கிழமை
தினந்தோறும் குர்ஆன் வசனம் 📚
اعوذ بالله من الشيطان الرجيم
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَ لِرَبِّكَ فَاصْبِرْ
உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள்.
(அல்குர்ஆன் : 74:7)
فَاِذَا نُقِرَ فِى النَّاقُوْرِۙ
எக்காளம் ஊதப்படும் பட்சத்தில்,
(அல்குர்ஆன் : 74:8)
فَذٰلِكَ يَوْمَٮِٕذٍ يَّوْمٌ عَسِيْرٌۙ
அந்நாள் மிக்க கஷ்டமான நாளாகும்.
(அல்குர்ஆன் : 74:9)
عَلَى الْكٰفِرِيْنَ غَيْرُ يَسِيْرٍ
(அந்நாள்) நிராகரிப்பவர்களுக்கு எளிதன்று.
(அல்குர்ஆன் : 74:10)
தொடர்
தினம் ஓர் ஹதீஸ் 📚
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
ஸஹீஹ் புகாரி : 3462.
அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்