விஜய் வருகையால் குலுங்கும் திருச்சி: மரக்கடை பகுதியில் போக்குவரத்து நெரிசல்!

தவெக விஜய் சுற்றுப் பயணத்தை முன்னிட்டு அதிகாலை முதலே திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதன் முறையாக இன்று மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார். திருச்சியில் இன்று காலை தொடங்க உள்ள சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சி மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களில் இருந்தும் அவரது ரசிகர்கள் அதிகாலை முதலே குவிந்து வருகின்றனர்.
விஜய்யை வரவேற்க திரண்ட தொண்டர்கள்!
அதேபோல் காலை 8.30 மணிக்கு விஜய் தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். அவரை வரவேற்க விமான நிலையத்திலும் ரசிகர்கள் அதிகளவில் கூடினர்.
விஜய் கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் முதல் மக்கள் சந்திப்பு பயணம் இது என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்த பயணத் திட்டம் என்ன?
இன்று காலையில் திருச்சி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்யும் விஜய் அதைத் தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதே போல் டிசம்பர் மாதம் வரை சனிக்கிழமைகளில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்பிரச்சாரம் மேற்கொள்ள அவருக்கென பிரத்தியேகமாக வாகனம் தயார் செய்யப்பட்டு உள்ளது. அதில் நவீன கேமரா, ஒலிப் பெருக்கி, இரும்பு வேலி ஆகியவை வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ளன. நேற்றே அந்த வாகனம் சென்னையிலிருந்து கிளம்பி திருச்சி வந்தது. வாகனம் வரும் வழியில் ரசிகர்கள், தொண்டர்கள் அதை வரவேற்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.