dark_mode
Image
  • Sunday, 23 November 2025

மார்க் குறைந்தால் 5, 8ம் வகுப்பில் 'பெயில்': சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அமலுக்கு வந்தது

மார்க் குறைந்தால் 5, 8ம் வகுப்பில் 'பெயில்': சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அமலுக்கு வந்தது

சென்னை : ஐந்து மற்றும் 8ம் வகுப்புகளில், குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை பெயிலாக்கும் முறை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அமலுக்கு வந்துள்ளது. 'எங்கள் குழந்தை குறைவான மதிப்பெண் எடுத்தால் பெயில் ஆக்க சம்மதிக்கிறேன்' என, பெற்றோரிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெற்று வருகின்றன.
 

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை, 'பெயில்' ஆக்கக்கூடாது என்ற நடைமுறை, இதுவரை அமலில் இருந்தது.

தேசிய கல்விக் கொள்கை 2020ல், அந்த விதி திருத்தப்பட்டது. அதன்படி, மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில், தேர்ச்சி சதவீதத்தை விட குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை, 'பெயில்' ஆக்கலாம். இந்த நடைமுறை, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு அமலுக்கு வந்துள்ளது. இவ்விபரத்தை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் தெரிவித்து, அவர்களின் சம்மத கடிதம் பெறப்படுகிறது.

Image 1413001

related_post