லடாக் எல்லையில் படை வாபஸ்; மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!
''சீனா எல்லைப்பிரச்னை 75 சதவீதம் தீர்க்கப்பட்டதாக நான் கூறியது, கிழக்கு லடாக் பிராந்தியத்தை மட்டும் தான்,'' என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு இராணுவங்களுக்கும் இடையே மோதல் நடந்தது.
இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது முதல் இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்துள்ளன.கடுமையான பனி, குளிர் காலத்திலும், இரு நாட்டு ராணுவ வீரர்களும் காவல் இருந்து வருகின்றனர். இது தொடர்பாக பல முறை பேச்சு நடத்தியும் விவகாரம் முடிவுக்கு வரவில்லை.இது குறித்து, ஆங்கில செய்தி சேனலுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டி: சீனாவுடன் எங்களுக்கு கடினமான வரலாறு உள்ளது. கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, சீனா எல்லையில் படைகளை குவித்தது.
மோதல் ஏற்பட்டதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.விவகாரம் தொடர்பாக இரு நாட்டு ராணுவத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில், தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனா இடையிலான 75 சதவீதம் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விட்டதாக கூறினேன். அது, கிழக்கு லடாக் பிராந்தியத்தில் படைகளை விலக்கிக் கொள்வது மட்டும் தான். மீதமுள்ள தீர்க்கப்படாத பிரச்னைகள் தொடர்பாகவும் பேச்சு நடந்து வருகிறது.
எல்லையில் ரோந்து செல்லும் விவகாரத்துக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.ஆசியாவின் எதிர்காலத்திற்கு இந்தியா-சீனா உறவு முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். இந்த உறவு ஆசியா மட்டுமல்லாமல் உலகின் எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.செப்டம்பர் 13ம் தேதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் கூட்டத்தின் ஒரு பகுதியாக சீன வெளியுறவு மந்திரி வாங் யியை சந்தித்தார். இருவரும் எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது.