ராசிபலன் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை
ராசிபலன் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை
மேஷம்
ஏப்ரல் 26, 2026
வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். பொழுது போக்கு செயல்களால் தாமதம் உண்டாகும். பணி நிமித்தமான நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். இலக்கிய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாறுபட்ட அனுபவங்களால் பக்குவம் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீல நிறம்
அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.
பரணி : தாமதம் உண்டாகும்.
கிருத்திகை : பக்குவம் பிறக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஏப்ரல் 26, 2026
பயணங்களால் அனுபவம் உண்டாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்குகள் ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும். பராபரியம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் உருவாகும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
கிருத்திகை : அனுபவம் உண்டாகும்.
ரோகிணி : அதிகாரங்கள் மேம்படும்.
மிருகசீரிஷம் : சோர்வுகள் குறையும்.
---------------------------------------
மிதுனம்
ஏப்ரல் 26, 2026
வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உருவாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : தன்னம்பிக்கை மேம்படும்.
---------------------------------------
கடகம்
ஏப்ரல் 26, 2026
குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் காணப்படும். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : வேறுபாடுகள் குறையும்.
பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : அபிவிருத்தியான நாள்.
---------------------------------------
சிம்மம்
ஏப்ரல் 26, 2026
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். குறுகிய தூர பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். அரசு காரியத்தில் கவனம் வேண்டும். புதுமையான சிந்தனைகள் பிறக்கும். செயல்களை திட்டமிட்டு செயல்படவும். உறவினர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : மாற்றம் ஏற்படும்.
பூரம் : சிந்தனைகள் பிறக்கும்.
உத்திரம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------
கன்னி
ஏப்ரல் 26, 2026
எதிலும் பதற்றமின்றி செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வாழ்க்கை துணையுடன் அன்பாக நடந்து கொள்ளவும். வெளியூர் தொடர்பான பயணங்கள் ஈடேறும். விடாப்படியான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திரம் : பதற்றமின்றி செயல்படவும்.
அஸ்தம் : பயணங்கள் ஈடேறும்.
சித்திரை : குழப்பங்கள் நீங்கும்.
---------------------------------------
துலாம்
ஏப்ரல் 26, 2026
வழக்கு பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். புதிய வேலை நிமித்தமான எண்ணங்கள் கைக்கூடும். வெளியூர் பயணங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சகோதர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : அனுபவம் உண்டாகும்.
விசாகம் : வாய்ப்புகள் உருவாகும்.
---------------------------------------
விருச்சிகம்
ஏப்ரல் 26, 2026
உத்தியோக பணிகளில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்கள் இடத்தில் நல்லுறவு உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்களில் நிதானம் வேண்டும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். மூத்த உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளில் வித்தியாசமான அனுபவங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
விசாகம் : ஏற்ற இறக்கமான நாள்.
அனுஷம் : நிதானம் வேண்டும்.
கேட்டை : அனுபவங்கள் ஏற்படும்.
---------------------------------------
தனுசு
ஏப்ரல் 26, 2026
உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தவறிய சில பொருட்கள் விவரங்கள் அறிவீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். தந்தையுடன் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மூலம் : புரிதல்கள் உண்டாகும்.
பூராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : வாதங்கள் மறையும்.
---------------------------------------
மகரம்
ஏப்ரல் 26, 2026
குழந்தைகள் செயல்களில் கவனத்துடன் இருக்கவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதளவில் குழப்பம் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு செயல்களால் கையிருப்புகள் குறையும். கலை பணிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சுபகாரிய தொடர்பான அலைச்சல்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : கவனத்துடன் இருக்கவும்.
திருவோணம் : விவேகத்துடன் செயல்படவும்.
அவிட்டம் : அலைச்சல்கள் மேம்படும்.
---------------------------------------
கும்பம்
ஏப்ரல் 26, 2026
திறமைக்குண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறுதூர பயணங்கள் சென்று வருவீர்கள். தனம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
அவிட்டம் : பாராட்டுக்கள் கிடைக்கும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.
---------------------------------------
மீனம்
ஏப்ரல் 26, 2026
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் மூலம் புதிய கண்ணோட்டம் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை குறைத்து கொள்ளவும். மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
பூரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : விவேகம் வேண்டும்.
ரேவதி : தெளிவுகள் பிறக்கும்.
---------------------------------------