ராசிபலன் 24-04-2026 வெள்ளிக்கிழமை
ராசிபலன் 24-04-2026 வெள்ளிக்கிழமை
மேஷம்
ஏப்ரல் 24, 2026
தாயார் வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில பணிகள் நிறைவு பெறும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். வீடு மாற்ற தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : லாபம் மேம்படும்.
கிருத்திகை : விட்டுக்கொடுத்து செல்லவும்.
---------------------------------------
ரிஷபம்
ஏப்ரல் 24, 2026
செய்கின்ற முயற்சியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படவும். இழுபறியான சில செயல்களுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : ஆதரவான நாள்.
மிருகசீரிஷம் : தேவைகள் நிறைவேறும்.
---------------------------------------
மிதுனம்
ஏப்ரல் 24, 2026
பொன் பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதானமான செயல்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : நம்பிக்கையை மேம்படுத்தும்.
புனர்பூசம் : கனிவு வேண்டும்.
---------------------------------------
கடகம்
ஏப்ரல் 24, 2026
உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி நிமித்தமான ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. கல்வி சார்ந்த செயல்களில் சில மாற்றம் ஏற்படும். புதிய தொழில் நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் மேம்படும். சிறு தூரப் பயணங்கள் மூலம் மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். புதிய முயற்சிகள் தொடர்பான பயணங்கள் கைகூடும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.
ஆயில்யம் : பயணங்கள் கைகூடும்.
---------------------------------------
சிம்மம்
ஏப்ரல் 24, 2026
வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். வியாபாரங்களில் இருந்து வந்த மந்த தன்மை குறையும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுபகாரிய தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : ஆரோக்கியத்தில் கவனம்
பூரம் : நம்பிக்கை பிறக்கும்.
உத்திரம் : அலைச்சல்கள் மேம்படும்.
---------------------------------------
கன்னி
ஏப்ரல் 24, 2026
தொழிலில் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். துறைகளில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். மூத்த உடன்பிறப்புகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திரம் : குழப்பங்கள் குறையும்.
அஸ்தம் : மாற்றங்கள் ஏற்படும்.
சித்திரை : ஒத்துழைப்பான நாள்.
---------------------------------------
துலாம்
ஏப்ரல் 24, 2026
எதிர்காலம் கருதி சில பணிகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தையுடன் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். வாகன வசதிகள் மேம்படும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி ஒரு தெளிவு பிறக்கும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
சித்திரை : மாற்றங்கள் ஏற்படும்.
சுவாதி : வேறுபாடுகள் விலகும்.
விசாகம் : தெளிவு பிறக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
ஏப்ரல் 24, 2026
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் மூலம் மேன்மை உண்டாகும். உத்தியோகப் பணிகளில் திடீர் இடமாற்றங்கள் நேரிடும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். போட்டி செயல்களில் ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : புரிதல் உண்டாகும்.
அனுஷம் : மேன்மை உண்டாகும்.
கேட்டை : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------
தனுசு
ஏப்ரல் 24, 2026
நண்பர்கள் வழியில் அலைச்சலும் எதிர்பாராத விரயங்களும் உண்டாகும். பணி புரியும் இடத்தில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் பிறக்கும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாக முடிவு பெறும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் வெளிப்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : விரயங்கள் உண்டாகும்.
பூராடம் : சிந்தனைகள் பிறக்கும்.
உத்திராடம் : மாற்றங்கள் வெளிப்படும்.
---------------------------------------
மகரம்
ஏப்ரல் 24, 2026
வாழ்க்கை துணைவர் பற்றிய புரிதல்கள் மேம்படும். மனதில் இருந்து வந்த கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலம் நிம்மதி ஏற்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : புரிதல்கள் மேம்படும்.
திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.
அவிட்டம் : ஆதரவான நாள்.
---------------------------------------
கும்பம்
ஏப்ரல் 24, 2026
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் நிறைவு பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில புதிய பயணங்கள் மூலம் அனுபவங்கள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
அவிட்டம் : முதலீடுகள் மேம்படும்.
சதயம் : வாய்ப்புகள் அமையும்.
பூரட்டாதி : அனுபவங்கள் கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
ஏப்ரல் 24, 2026
சபை தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களை விற்பதில் லாபம் கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கு தெளிவும் புரிதலும் பிறக்கும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் பிறக்கும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதர வகையில் இருந்த வேறுபாடுகள் விலகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரட்டாதி : லாபம் கிடைக்கும்.
ரேவதி : வேறுபாடுகள் விலகும்.
---------------------------------------