dark_mode
Image
  • Monday, 25 May 2026

ராசிபலன் 25-05-2026 திங்கள்கிழமை

ராசிபலன் 25-05-2026 திங்கள்கிழமை

ராசிபலன் 25-05-2026 திங்கள்கிழமை

மேஷம்
மே 25, 2026

கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஆதரவு ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வெளிநாடு தொடர்பான வாய்ப்புகள் சாதகமாகும். பணிகளில் இருந்த போட்டிகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அஸ்வினி : ஆதரவு ஏற்படும்.
பரணி : புரிதல் மேம்படும்.
கிருத்திகை : போட்டிகள் குறையும்.

---------------------------------------


ரிஷபம்
மே 25, 2026

வியாபார ரீதியான சிலரின் சந்திப்புகள் மாற்றத்தை உருவாக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். கால்நடை பணிகளில் லாபம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : மாற்றம் பிறக்கும்.
ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.
மிருகசீரிஷம் : ஆதாயகரமான நாள்.

---------------------------------------


மிதுனம்
மே 25, 2026

பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். உறவுகளிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். தவறிப்போன சில பொருட்கள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உற்பத்தி துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.
திருவாதிரை : அனுபவம் வெளிப்படும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------


கடகம்
மே 25, 2026

மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். சகோதர வகையில் நன்மைகள் ஏற்படும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகப் பணிகளில் திருப்தி உண்டாகும். சொத்து பிரச்சனைகளுக்கு முடிவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் நிறம்

புனர்பூசம் : நன்மைகள் ஏற்படும்.
பூசம் : புரிதல் உண்டாகும்.
ஆயில்யம் : திருப்தியான நாள்.

---------------------------------------


சிம்மம்
மே 25, 2026

அனுபவங்கள் மூலம் சில முடிவுகளை எடுப்பீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். தன வரவுகள் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் அமையும். செயல்பாடுகளில் இருந்து சோர்வுகள் குறையும். பேச்சுகளில் கலைநயம் வெளிப்படும். வியாபாரப் பணிகளில் மேன்மை உண்டாகும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் நிறம்

மகம் : அறிமுகங்கள் ஏற்படும்.
பூரம் : சோர்வுகள் குறையும்.
உத்திரம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------


கன்னி
மே 25, 2026

மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். வெளி நபர்களிடம் கவனம் வேண்டும். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். புதிய தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : கனவுகள் பிறக்கும்.
அஸ்தம் : செலவுகள் உண்டாகும்.
சித்திரை : கவனம் வேண்டும்.

---------------------------------------


துலாம்
மே 25, 2026

குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். பூர்விக சொத்துகள் மூலம் சில விரயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

சித்திரை : வாதங்கள் மறையும்.
சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
விசாகம் : விரயம் உண்டாகும்.

---------------------------------------


விருச்சிகம்
மே 25, 2026

நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பொறுப்புகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். ஆராய்ச்சி பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : தேவைகள் நிறைவேறும்.
அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------


தனுசு
மே 25, 2026

எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வீடு பராமரிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். தொழில் நிமித்தமான அலைச்சலால் அனுபவம் மேம்படும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைகூடும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான சூழ்நிலை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

மூலம் : ஆதரவான நாள்.
பூராடம் : அனுபவம் மேம்படும்.
உத்திராடம் : சாதகமான நாள்.

---------------------------------------


மகரம்
மே 25, 2026

குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : விட்டுக் கொடுத்து செயல்படவும்.
திருவோணம் : செல்வாக்கு மேம்படும்.
அவிட்டம் : ஆதாயம் உருவாகும்.

---------------------------------------


கும்பம்
மே 25, 2026

புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாக கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபாரப் பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.
சதயம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
பூரட்டாதி : நெருக்கடிகள் உண்டாகும்.

---------------------------------------


மீனம்
மே 25, 2026

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். சுபகாரிய விரயங்கள் உண்டாகும். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். பழைய வாகனங்களை மாற்றி அமைப்பீர்கள். போட்டிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

பூரட்டாதி : ஒற்றுமை உண்டாகும்.
உத்திரட்டாதி : விரயங்கள் உண்டாகும்.
ரேவதி : இலக்குகள் பிறக்கும்.

---------------------------------------