dark_mode
Image
  • Friday, 14 August 2026

ராசிபலன் 15-08-2026 சனிக்கிழமை

ராசிபலன் 15-08-2026 சனிக்கிழமை

ராசிபலன் 15-08-2026 சனிக்கிழமை

மேஷம்
ஆகஸ்ட் 15, 2026

தனம் சார்ந்த தேவைகள் நிறைவேறும். ஆதரவானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வங்கியில் இருந்து வந்த இழுபறியான சூழல்கள் குறையும். உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : தேவைகள் நிறைவேறும்.
பரணி : வேறுபாடுகள் மறையும்.
கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.

---------------------------------------


ரிஷபம்
ஆகஸ்ட் 15, 2026

குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சேமித்த பணம் உரிய நேரத்தில் கிடைக்கும். குழந்தைகளை மேற்படிப்புக்காக வெளியூர் அனுப்புவீர்கள். மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துக்களை தவிர்க்கவும். ஆதரவற்றோருக்கு உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். புதுமையான சில செயல்களில் ஈடுபாடுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : கருத்துக்களில் கவனம்.
மிருகசீரிஷம் : ஈடுபாடுகள் உண்டாகும்.

---------------------------------------


மிதுனம்
ஆகஸ்ட் 15, 2026

விவசாய பணிகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். புதிய வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : ஏற்ற இறக்கமான நாள்.
திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும்.
புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------


கடகம்
ஆகஸ்ட் 15, 2026

வியாபாரம் நிமித்தமான அலைச்சல் உண்டாகும். இணையத் துறைகளில் திறமைகள் வெளிப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் மேம்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

புனர்பூசம் : அலைச்சல் உண்டாகும்.
பூசம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
ஆயில்யம் : ஆதரவான நாள்.

---------------------------------------


சிம்மம்
ஆகஸ்ட் 15, 2026

இழுபறியான வரவுகள் கிடைக்கும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். மற்றவர்களுக்கு தேவையான பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய செயல் திட்டங்களை அமைப்பீர்கள். சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உணர்வுபூர்வமாக பேசுவதை குறைத்துக் கொண்டு சூழ்நிலை அறிந்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

மகம் : முயற்சிகள் ஈடேறும்.
பூரம் : சுறுசுறுப்பான நாள்.
உத்திரம் : பேச்சுக்களில் கவனம்.

---------------------------------------


கன்னி
ஆகஸ்ட் 15, 2026

வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எண்ணிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வீட்டை விரிவுபடுத்துவது தொடர்பான சிந்தனைகள் உருவாகும். மறைமுகமாக இருந்துவந்த தடைகளை அறிந்துகொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திரம் : அலைச்சல் மேம்படும்.
அஸ்தம் : ஆதரவான நாள்.
சித்திரை : தடைகளை அறிவீர்கள்.

---------------------------------------


துலாம்
ஆகஸ்ட் 15, 2026

விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்த சில பணிகளை முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பதற்கான பக்குவம் பிறக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : அலைச்சல்கள் ஏற்படும்.
சுவாதி : பக்குவம் பிறக்கும்.
விசாகம் : கவனம் வேண்டும்.

---------------------------------------


விருச்சிகம்
ஆகஸ்ட் 15, 2026

எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வருமான வாய்ப்புகளை உயர்த்துவீர்கள். நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதளவில் தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

விசாகம் : உதவிகள் சாதகமாகும்.
அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
கேட்டை : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------


தனுசு
ஆகஸ்ட் 15, 2026

குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். சமூகம் குறித்த புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். கடன் சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பணி சார்ந்த விஷயங்களில் பொறுமை காக்கவும். வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : நுட்பங்களை அறிவீர்கள்.
உத்திராடம் : அனுபவம் வெளிப்படும்.

---------------------------------------


மகரம்
ஆகஸ்ட் 15, 2026

புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். உயரதிகாரிகள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
திருவோணம் : பொறுமையுடன் செயல்படவும்.
அவிட்டம் : மாற்றம் பிறக்கும்.

---------------------------------------


கும்பம்
ஆகஸ்ட் 15, 2026

அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்யவும். ஜாமீன் செயல்களை தவிர்க்கவும். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : குழப்பம் ஏற்படும்.

---------------------------------------


மீனம்
ஆகஸ்ட் 15, 2026

உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கலகலப்பான பேச்சுகள் மூலம் நட்பு வட்டம் மேம்படும். புதிய நபர்களால் ஆதாயம் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். இணைய துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
உத்திரட்டாதி : நட்பு மேம்படும்.
ரேவதி : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------