dark_mode
Image
  • Tuesday, 13 May 2025

ராசிபலன் 01-02-2023 புதன்கிழமை

ராசிபலன் 01-02-2023 புதன்கிழமை

ராசிபலன் 01-02-2023 புதன்கிழமை

🔯 மேஷம் -ராசி: 🐐
இழுபறியான பணிகளையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். உங்களின் மறைமுகத்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி உண்டாகும். நவீன தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாமதம் குறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

⭐️அஸ்வினி : மாற்றம் உண்டாகும்.
⭐️பரணி : திறமைகள் வெளிப்படும்.
⭐️கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
════════════════

🔯 ரிஷபம் -ராசி:  🐂
மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரம் சார்ந்த புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். செயல்பாடுகளில் சுதந்திரப் போக்கு அதிகரிக்கும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். வெளி உணவுகளை தவிர்க்கவும். தடைபட்டு போன சில காரியங்கள் திடீரென்று நடைபெறும். சுகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்.

⭐️கிருத்திகை : விருப்பம் நிறைவேறும்.
⭐️ரோகிணி : அறிமுகம் ஏற்படும்.
⭐️மிருகசீரிஷம் : தடைகள் விலகும்.
════════════════

🔯 மிதுனம் -ராசி: 👫
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வேலை நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

⭐️மிருகசீரிஷம் : நெருக்கடிகள் உண்டாகும்.
⭐️திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
⭐️புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
════════════════

🔯 கடகம் -ராசி: 🦀
எண்ணியப் பணிகளை அலைச்சல்களுக்குப் பின்பு செய்து முடிப்பீர்கள். உயர்கல்வி சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தொழில் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். சிக்கல் விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு.

⭐️புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
⭐️பூசம் : விருப்பம் நிறைவேறும்.
⭐️ஆயில்யம் : ஆர்வம் ஏற்படும்.
════════════════

🔯 சிம்மம் -ராசி:  🦁
வியாபாரம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். முயற்சி வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

⭐️மகம் : மேன்மையான நாள்.
⭐️பூரம் : மதிப்பு அதிகரிக்கும்.
⭐️உத்திரம் : மாற்றமான நாள்.
════════════════

🔯 கன்னி -ராசி: 🧛‍♀️
விளையாட்டுப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். காப்பீடு சார்ந்த துறைகளில் லாபம் அதிகரிக்கும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். தகவல் தொடர்புத்துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். புதுவிதமான தேடல் உண்டாகும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️உத்திரம் : ஆர்வம் ஏற்படும்.
⭐️அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.
⭐️சித்திரை : தேடல் உண்டாகும்.
════════════════

🔯 துலாம் -ராசி: ⚖
வர்த்தகம் சார்ந்த பணிகளில் லாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்‌.

⭐️சித்திரை : நெருக்கம் அதிகரிக்கும்.
⭐️சுவாதி : சாதகமான நாள்.
⭐️விசாகம் : ஒத்துழைப்பு மேம்படும்.
════════════════

🔯 விருச்சிகம் -ராசி: 🦂
இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். வழக்கு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️விசாகம் : குழப்பமான நாள்.
⭐️அனுஷம் : அனுசரித்து செல்லவும்.
⭐️கேட்டை : பொறுமை வேண்டும்.
════════════════

🔯 தனுசு -ராசி: 🏹
மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் மூலம் புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். புதிய உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️மூலம் : காரியங்கள் கைகூடும்.
⭐️பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️உத்திராடம் : புரிதல் மேம்படும்.
════════════════

🔯 மகரம் -ராசி: 🐴
மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை நிமிர்த்தமான செயல்கள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விவசாயம் சார்ந்த பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.

⭐️உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.
⭐️அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.
════════════════

🔯 கும்பம் -ராசி. ⚱
உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். கலை சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
⭐️சதயம் : பயணங்கள் கைகூடும்.
⭐️பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
════════════════

🔯 மீனம் -ராசி: 🐠
பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனை மற்றும் வாகன விருத்தி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செல்வச்சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். களிப்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

⭐️பூரட்டாதி : ஆதரவான நாள்.
⭐️உத்திரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐️ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.
════════════════

ராசிபலன் 01-02-2023 புதன்கிழமை

comment / reply_from