dark_mode
Image
  • Saturday, 19 April 2025

முல்லை பெரியாறு அணை; மக்களை குழப்பும் பழனிசாமி - அமைச்சர் துரைமுருகன்

முல்லை பெரியாறு அணை; மக்களை குழப்பும் பழனிசாமி - அமைச்சர் துரைமுருகன்
ண்டை மாநில நதிநீர் பிரச்சனையில் மக்களை குழப்ப முயற்சிகளை விடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைப்பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியதுடன்
வரும் 9 ஆம் தேதி மதுரையில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் 152 அடிக்கு நீர் தேக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2006-ல் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக கேரள நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தாம் நடத்திய ஆலோசனைகள் குறித்தும் பட்டியலிட்டுள்ளார்.

முல்லைப்பெரியாறு பகுதியில் தரைப்பாலம் சீரமைக்கும் பணி கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கி, மே 9 ஆம் தேதி முடிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அணையை பலப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

: சிறப்பு நீதிமன்றதில் ஆஜரான அமைச்சர் செந்தில் பாலாஜி! குற்றம்சாட்டப்பட்ட 2,202 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் அனுப்ப முடிவு!

அண்டை மாநில நதிநீர் பிரச்சனையில் அரசியல் லாபம் கருதி போராட்டங்களை அதிமுக அறிவித்துள்ளதாகவும், மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து அதிமுக ஆக்கபூர்வமாக செயல்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முல்லை பெரியாறு அணை; மக்களை குழப்பும் பழனிசாமி - அமைச்சர் துரைமுருகன்

comment / reply_from

related_post