மும்பை தமிழ்ச் சங்கத்திற்கு மேலும் ரூ.50 லட்சம் நிதி..!

நவி மும்பை தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்க பணிகளுக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியது.
இந்த நிதியை, சங்க நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், நவி மும்பை தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், நவி மும்பை தமிழ்ச் சங்கத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் வ.ரெ.போ. கிருஷ்ணமூர்த்தியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
ஏற்கனவே திமுக அரசு பொறுப்பேற்றதும், முடிவுறாமல் இருந்த நவிமும்பை தமிழ்ச் சங்கத்தின் கட்டட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக ரூபாய் 25 லட்சம் முதலமைச்சரால் 10.12.2021 அன்று வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கட்டடப் பணிகளை முடித்திட கூடுதல் தொகைக்காக விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று, கட்டடப் பணிகளுக்காக மேலும் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலை முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட்டது.
அவ்வகையில், நவிமும்பை தமிழ்ச் சங்க கட்டட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக தமிழக அரசின் சார்பில் மொத்தம் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description