முதல் முறையாக பாடல்கள் இல்லாத படத்தில் நடித்திருக்கிறேன் -நடிகர் சசிகுமார்
முதல் முறையாக பாடல்கள் இல்லாத படத்தில் நடித்திருக்கிறேன் என நான் மிருகமாய் மாற படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சசிகுமார் தெரிவித்தார்.
சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள நான் மிருகமாய் மாற படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர் சசிகுமார், ஜிப்ரான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய இசையமைப்பாளர் ஜிப்ரான், படத்தை பார்த்து தான் நான் இசையமைக்க வந்தேன். இயக்குநர் சத்யசிவா இந்த படத்தில் நிறைய விஷயங்களைப் புதிதாக முயற்சி செய்திருக்கிறோம். படத்தின் தொடரே புதிதாக இருக்கும். இந்த கதையை நேராக கூட கேட்கவில்லை. போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினோம். இந்த படத்தில் அவர் ஒரு இயக்குநர் என்பதை மறந்து, நடிகராக இருந்ததற்கு நன்றி. படத்தில் பாடல்கள் இல்லை முற்றிலும் பின்னணி இசையை மட்டுமே நம்பி கதை நகரும். படப்பிடிப்பானது ஒரு குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டது என கூறினார்.
மேலும், படத்தில் எடுக்கப்பட்ட சிங்கிள் ஷாட் காட்சியானது எழுதும்போது முழுக்க முழுக்க பெயிண்ட் தொழிற்சாலையில் எடுக்க வேண்டும் என்று நினைத்தது. அது 7 நாட்கள் தொடர்ந்து எடுத்தால் நடிகருக்கு தொந்தரவு செய்யும் படி அமையும் ஆகையால் அதை ஒரே நாளில் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம் என்றும் அவர் கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய நடிகர் சசிகுமார், அடுத்த வாரம் ஒரு படம் வரவிருக்கிறது.படத்தை சிரமப்பட்டு எடுத்தோம். படத்தில் மழை காட்சிகள் அதிகம் இருக்கும்.இயக்குநர் சத்யசிவாவின் அடுத்த படத்திலும் நான் நடிக்கிறேன். பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்திலும் நானும் ஜிப்ரானும் இணைந்து வேலை செய்து வருகிறோம். முதல் முதலாக பாடல்கள் இல்லாத படத்தில் நடிக்கிறேன். நானும் விக்ராந்தும் இணைந்து நடிக்கும் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். நாயகி என்னைப்பார்த்து பயப்படுவேன் என்று சொன்னதுக்கு காரணம், படங்களில் நிறையச் சண்டைக் காட்சிகள் இருக்கும் அதன் காரணம் என அவர் பேசினார்.