மின்சார ரயில் பயணிகள் கவனத்திற்கு. சென்னையில் இன்று முதல் ஆக.14 வரை 55 ரயில்கள் ரத்து!
பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் வரும் 14ம் தேதி வரை கடற்கரை - தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை மக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து அமைந்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பது உள்ளிட்ட பல காரணங்களை கருத்திற்கொண்டு மக்கள் அதிகமாக பயன்படுத்துவது மின்சார ரயில்கள் தான். இந்நிலையில் இன்று முதல் ஆகஸ்ட் 14 வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது. ரத்து செய்யப்பட்டதற்கு மாறாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்றுமுதல் வரும் 14-ம் தேதி வரை ஏற்கனவே அறிவித்தது போலவே காலை 9.20 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், இரவு 10.30 மணி முதல் அதிகாலை 2.45 மணி வரையிலும் உள்ள மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. தற்போது கூடுதலாக சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்களை இங்கு காண்போம்.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு
சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை காலை 9,9.30, 9.56,10.56, 11.40 நண்பகல் 12.20,12.40 மற்றும் இரவு 10.40 மணிக்கு இயக்கப்படுகின்ற ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை - தாம்பரம்
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை காலை 9.40, 9.48, 10.04, 10.12, 10.24, 10.30, 10.36, 10.46, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50 நண்பகல் 12.00, 12.10, 12.30, 12.50 மற்றும் இரவு 11.05,11.30,11.59 மணி இயக்கப்படுகின்ற ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி
சென்னை கடற்கரை முதல் கூடுவாஞ்சேரி வரை இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 மணிக்கு இயக்கப்படுகின்ற ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை - பல்லாவரம்
சென்னை கடற்கரை முதல் பல்லாவரம் வரை காலை 09.30 மணிமுதல் மதியம் 12. 45 வரை இயக்கப்படும் ரயில்களும், இரவு 10.40 முதல் 11.59 மணிவரையிலும் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம் - சென்னை கடற்கரை
பல்லாவரம் முதல் சென்னை கடற்கரை வரை காலை 10.17 முதல் மதியம் 1.17மணி வரையிலான ரயில்கள் மற்றும் மதியம் 1.42 மணிமுதல் இரவு 11.30 மற்றும் 11.55 மணி வரையிலும் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - சென்னை கடற்கரை
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் காலை 7.17, 8.19, 9.00, 9.22, 9.40 மற்றும் 9.50 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்துச் செய்யப்படுகிறது. மேலும் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மாலை 6.26 மற்றும் 7.15 மற்றும் இரவு 11.40 மணிக்கு இயக்கப்படுகின்ற ரயில்கள் ரத்து செய்யப்படுகிறன.
செங்கல்பட்டு - சென்னை கடற்கரை
செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரை காலை 11மணி முதல் 12 மணிவரையிலும் மற்றும் இரவு 11.00 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரை
கூடுவாஞ்சேரி முதல் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் 08.55 - 11.20 இரவு நேர ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்பட்ட காலை 10.00 மணி ரயில் ரத்து செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் முதல் சென்னை கடற்கரை வரை காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இதே போன்று திருமால்பூர் முதல் சென்னை கடற்கரை வரை காலை 11.05 மணி இயக்கப்படும் ரயிலும் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.