பெயர் வைப்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்காது!
புதியதாகப் பெயர் வைப்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடாது என்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது பற்றி ட்வீட் செய்துள்ள அவர், குழந்தைகளுக்கான ஊட்டச் சத்தை உறுதி செய்ய திட்டம், பிரதமர் மோடி ஏற்கனவே கடந்த ஏழு ஆண்டுகளாகச் செயல்படுத்தி வரும் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை, ஒழுங்காகப் பயன்படுத்தினாலே போதுமானது. புதியதாகப் பெயர் வைப்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடாது என்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.