dark_mode
Image
  • Friday, 11 April 2025

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பாதி விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை!

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பாதி விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை!
ன்று நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கியும் , இணைய தளம் மூலம் பிரதமருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும் கொண்டாடி வருகின்றனர்.
 
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஆர்.பி ஏஜென்சி பெட்ரோல் பங்கில் பிரதமரின் பிறந்த நாளை சிறப்பிக்கும் பொருட்டு பெட்ரோல் மற்று டீசல் பாதி விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.பி அரசு ஏஜென்சி உரிமையாளரும், பாஜகவை சேர்ந்தவருமான விஜயராகவன் என்பவர் தனது பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் பாதி விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். இதன் காரணமாக காலை முதல் இந்த பெட்ரோல் பங்கில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
 
மேலும் அவர் பிரதமர் மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த மாதம் முழுவதும் விவசாயிகளுக்கு டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்து வழங்கப்படும் என்கிற அறிவிப்பு பலகையையும் தனது பெட்ரோல் பங்கில் வைத்துள்ளார். இது பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பாதி விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை!

comment / reply_from

related_post