dark_mode
Image
  • Thursday, 12 December 2024

"பி.எஸ்.எல்.வி.-சி59 ராக்கெட் ஏவுதல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைப்பு

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வடிவமைத்துள்ள இரு செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி.,-சி59 ராக்கெட் ஏவுவது நாளை மாலை 4:12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. செயற்கைக்கோளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த முடிவை இஸ்ரோ எடுத்துள்ளது.

நம் நாட்டின் தகவல் தொடர்பு, புவி கண்காணிப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக, செயற்கைக்கோளை வடிவமைக்கும் இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்டுகள் உதவியுடன், அவற்றை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. இது தவிர, வருவாய் ஈட்டும் வகையில் வணிக நோக்குடன், வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களையும், விண்ணில் இஸ்ரோ செலுத்துகிறது.

அதன்படி, தற்போது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், 'புரோபா - 3' என்ற பெயரில் இரு செயற்கைக்கோள்களை வடிவமைத்துள்ளது. இவை, சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வுசெய்ய உள்ளன.மொத்தம், 550 கிலோ எடை உடைய அந்த செயற்கைக்கோள்களை சுமந்தபடி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆய்வுமைய ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., - சி59 ராக்கெட் இன்று மாலை, 4:08 மணிக்கு விண்ணில் பாய இருந்தது.

இதற்கான, 25 மணி நேர, 'கவுன்ட் டவுன்' நேற்று பிற்பகல், 3:08 மணிக்கு துவங்கியது. ராக்கெட்டின் இயக்கம் மற்றும் செயல்பாடுகளை, இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர்.

அதில், செயற்கைக்கோளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து பி.எஸ்.எல்.வி.,-சி 59 ராக்கெட் ஏவுவது நாளை மாலை 4:12 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

comment / reply_from

related_post

newsletter

newsletter_description