பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

கோவைல நடந்த வேங்கார்ட் அகடாமி திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பகுதி நேர ஆசிரியர்கள் பற்றி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடந்து வருவதாக கூறினார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டெட் தேர்வு ரிவ்யூ பெட்டிஷன், பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கான உதவி குறித்து முக்கிய தகவல்களை தெரிவித்தார்.
கோவையில் அகாடமி திறப்பு விழா!
கோவையில் நடந்த வேங்கார்ட் அகடாமி திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது, ஆசிரியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும், அரசு அவர்களை கவனித்துக்கொள்ளும் என்றும் உறுதியளித்தார். மேலும், பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்விக்கு அரசு உதவி செய்யும் என்றும் அவர் கூறினார்.