dark_mode
Image
  • Friday, 04 April 2025

நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை..!

நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை..!

திருநெல்வேலி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் அவர்களின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் பணியாற்றிவிருப்ப ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன்

தற்போது இவர்திருநெல்வேலி டவுணில் உள்ள முர்த்திம் ஜர்கான் தர்க்காவில் முத்தவல்லியாக (அறங்காவலர்) செயல்பட்டு வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜாகிர் உசேன் ரியல் எஸ்டேட் தொழிலை மிகப் பெரிய அளவில் செய்து வருகிறார். இடத்தகராறு காரணமாக தவபிக் என்ற நபரிடம் முன் விரோதம் இருந்துள்ளது. தர்க்கா அருகில் உள்ள 36 சென்ட் இடம் தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் இருந்ததாக தெரிகிறது. நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரமலான் நோன்பை துவங்கிய ஜாகிர் உசேன் நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகே அதிகாலையில் தொழுகை முடிந்து விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்த போது நான்கு பேர் சேர்ந்த கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி உள்ளனர்.இதில் ரத்த வளர்த்தல் சரிந்த அவர் உயிரிழந்த நிலையில்

கொலை செய்த கும்பல் இருசக்கர வாகனத்தில் அங்கு இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அவ்வழியாக வந்தவர்கள் ஒருவர் வெட்டுப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்ப இடத்திற்கு விரைந்து வந்தநெல்லை டவுன் காவல் நிலைய காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பதற்றத்தை தணிக்க நெல்லை மாநகர காவல் துணைய ஆணையர் கீதா தலைமையில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜாகிர் உசேன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் கார்த்திக், அக்பர் ஷா ஆகிய இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

 

கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஜாகிர் உசேன் பேசி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் . அதில் நில அபகரிப்பு செய்தவர்களுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும் தான் கொலை செய்யப்பட்டால் நெல்லை டவுன் காவல் ஆய்வாளர் மற்றும் நெல்லை உதவி ஆணையர் ஆகிய இருவரும் தான் காரணம் என்றும் அந்த வீடியோவை பதிவிட்டு தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோ பதிவில்

நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்ட விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் உதவி காவல் ஆய்வாளர் ஜாகிர் உஷேனுக்கு பிஜிலிபாய் என்ற மனைவி யும் மகன் மகள் உள்ளனர்.

மகன் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

comment / reply_from

related_post