நிலவில் விக்ரம் லேண்டர், ரோவர் கண்விழிக்குமா?
சந்திரயான் -3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர்கள் செயல் இழந்த நிலையில் விரைவில் எழுந்திருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே குறைந்து வருகிறது. செப்டம்பர் 22 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் சூரியன் உதயமான நிலையில், அவற்றிலிருந்து சிக்னல்களை கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இருப்பினும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நேர்மறையான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், பணியில் உள்ள கருவிகள் குளிரான சூழலைத் தாங்க முடியாமல் செயல் இழந்ததாக கூறப்படுகிறது. நாட்கள் செல்லச் செல்ல சந்திரயான் -3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் செயல்படும் வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.