"நானும் நாகர்கோவில் பொண்ணுதான்!" – நடிகை மஞ்சு வாரியர் உருக்கமான வெளிப்பாடு!
நானும் நாகர்கோவில் பொண்ணு! அங்கே தான் பிறந்து வளர்ந்தேன்.. அந்த விஷயம் மறக்க முடியாது- மஞ்சுவாரியர்
சென்னை: மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் மஞ்சு வாரியர் பேட்டி ஒன்றில் பேசும் போது தான் நாகர்கோவிலில் தான் பிறந்து வளர்ந்தேன் என்று கூறியிருக்கிறார். அதோடு தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சினிமா அனுபவம் குறித்தும் பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று எப்படி நயன்தாரா கொண்டாடப்படுகிறாரோ அது போல தான் மலையாள சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக மஞ்சுவாரியர் கொண்டாடப்படுகிறார். ஆனால் அவருடைய பூர்வீகம் கேரளாவில் உள்ள திருச்சூர் ஆக இருந்தாலும் அவர் பிறந்து வளர்ந்தது கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பக்கத்தில் உள்ள பார்வதிபுரத்தில் தான் மஞ்சு வாரியர் பிறந்தாராம்.
இந்த விஷயத்தை தற்போது விடுதலை 2 பட ப்ரோமோஷன் போது மஞ்சுவாரியர் பேசியிருக்கிறார். அதோடு சினிமாவில் தனக்கு மறக்க முடியாத திரைப்படங்கள் குறித்தும் பேசி இருக்கிறார். அதிலும் படையப்பா படம் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாது. அந்த படம் நான் சின்ன வயதில் இருக்கும்போது பார்த்தேன். அப்போது எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
நாங்கள் நாகர்கோவிலில் வசிக்கும் போது அதிகமான திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். அந்த படங்கள் பார்த்த இன்ஸ்பிரேஷனில் தான் நான் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். எனக்கு எப்போதுமே பெஸ்ட் தமிழ் திரைப்படங்கள் என்று சொல்வேன். நான் இன்று சினிமாவில் நிலைத்திருப்பதற்கு காரணம் ஆரம்ப காலகட்டத்தில் நான் பார்த்த படங்கள்தான் என்று நெகிழ்ச்சியுடன் மஞ்சுவாரியர் கூறியிருக்கிறார்.
மஞ்சு வாரியர் நடிப்பில் விடுதலை 2 திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தில் பெண்ணியம் பேசும் புரட்சிகரமான கேரக்டரில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார். 45 வயதாகும் மஞ்சுவாரியர் தான் நடிகன் திரைப்படங்களில் எல்லாம் கெத்தான கேரக்டரில் நடித்து வருகிறார். அதிலும் அவர் நடிப்பில் வந்த அசுரன் திரைப்படத்தில் அவருடைய நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லலாம்.
தனுஷுக்கு அந்தப் படத்தில் எவ்வளவு பெயர் கிடைத்ததோ அதே அளவிற்கு மஞ்சுவாரியருக்கும் பெயர் கிடைத்தது. அசுரன் படத்தில் அந்த கேரக்டரோடு கேரக்டராக பொருந்தி இருந்தார். அதுபோல மஞ்சுவாரியர் முதல் முதலாக மலையாள படத்தில் தான் நடிக்க தொடங்கினார். அதுபோல நடிகர் திலீப்பை தான் திருமணம் செய்திருந்தார். அவரோடு 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். அதற்கு பிறகு சிங்கிளாக இருந்து வரும் மஞ்சு வாரியார் தற்போது நானும் நாகர்கோவில் பொண்ணுதான் என்று பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.