
தென் தமிழக கடலோர பகுதிகளில் 10 முதல் 13 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக நீடித்து வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு இருக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 11 வரை 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.