dark_mode
Image
  • Monday, 21 July 2025

திருமாவளவன்: "நடிகர்களை பின்பற்றும் ஆட்டுமந்தை போல் இளைஞர்கள் எனக்கு தேவையில்லை"

திருமாவளவன்:

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நடிகர்கள் அரசியலுக்கு வருவதால், அவர்களை பின்பற்றும் ஆட்டுமந்தை போல் இளைஞர்கள் கட்சிக்கு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். 

 

விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் பேசிய திருமாவளவன், "நடிகர்கள் கட்சி தொடங்கும் போது, இளைஞர்கள் அவர்களை ஆட்டுமந்தை போல் பின்பற்றினால், அவர்கள் எனக்கு தேவையில்லை" என்று கூறினார். 

 

அவர் மேலும், "சினிமா கவர்ச்சியின் மூலம் எங்கள் இளைஞர்களை திசைமாற்ற முடியாது. பெரியார், அம்பேத்கர், மார்க்ஸை ஏற்றுக்கொண்டு என்னோடு பயணிக்கும் இளைஞர்களை எந்தக் கொம்பனாலும் திசைமாற்ற முடியாது" என்று வலியுறுத்தினார். 

 

திருமாவளவனின் இந்த கருத்துக்கள், சமீபத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற செய்திகளுக்கு பின்னர் வந்துள்ளன. அவருடைய இந்த பேச்சு, விஜய்யை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது..

related_post