தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது வடக்கு தெலங்கானா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய விதர்பா பகுதியை நோக்கி வரக்கூடும்.
இதேபோல், தென் இந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இந்த வானிலை அமைப்புகளின் காரணமாக, செப்டம்பர் 15 முதல் 20-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
தென் தமிழக கடற்கரை பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், மற்றும் வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளில் செப்டம்பர் 15 முதல் 17 வரை, மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.