dark_mode
Image
  • Tuesday, 07 October 2025

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு : டெல்டா வெதர்மேன் கணிப்பு!

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு : டெல்டா வெதர்மேன் கணிப்பு!

அடுத்த 7 - 8 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக இடியுடன் கூடிய மழை தொடரும் என்று டெல்டா வெதர்மேன் கணித்துள்ளார்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஏறக்குறைவு நிறைவு பெறும் தருவாய்க்கு வந்துள்ளது. அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என்றும், அது நவம்பர், டிசம்பர் மாதங்களில் தீவிரமாக இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அதே சமயம் புயல், காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளிட்டவை உருவாகி இயல்பை விட அதிக மழையைக் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் மழை நிலவரம் தொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் சில தகவல்களை பதிவிட்டுள்ளார். அதில், “வட மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பதிவாகியுள்ளது. கசென்னை மற்றும் புறநகர்மாவட்டங்களில் பலத்த இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இன்று வடகடலோரம், வடக்கு உள் மாவட்டங்கள், டெல்டா, தென்மாவட்டங்கள் என பரவலாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்று (16.09.2025) முதல் (23.09.2025) வரையில் அடுத்த 7 - 8 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக இடியுடன் கூடிய மழை தொடரும். மாலை, இரவு உள் மாவட்டங்களிலும், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் கடலோர மாவட்டங்களிலும் மழை எதிர்ப்பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல டெல்டா வெதர்மேனின் மற்றொரு பதிவில், “வடகிழக்கு பருவமழை சுமார் நான்கு வாரங்களில் நெருங்கி வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சென்னை மற்றும் காரைக்கால் வானிலை ரேடார்களின் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், இவை தற்போது பராமரிப்பில் தொடர்கிறது.

கூடுதலாக, பொதுமக்களுக்கு அணுக முடியாத பள்ளிக்கரணை NIOT ரேடாரை, அனைவருக்கும் திறந்த அணுகலை வழங்க இந்திய வானிலை ஆய்வு மையம் பரிசீலிக்க வேண்டும். அனைத்து ரேடார் செயல்பாடுகளும் பருவமழை செயல்பாடுகளை திறம்பட கண்காணிப்பதில் பெரும் பங்கு வகிப்பதால், ரேடார் பிரச்சனைகளை முன்னுரிமைப்படுத்த வேண்டிய அவசரத்தை வலியுறுத்துகிறேன்.

இதற்கிடையில், பெருச்சென்னை மாநகராட்சி ( தனது தானியங்கி மழை அளவிகளை துல்லியமான மழை அளவு தரவுகளை வழங்குவதற்கு அளவுத் திருத்தம் செய்ய வேண்டும். வடகிழக்கு பருவமழை பருவம் நெருங்கி வருவதால், நாம் ஆழ்ந்த தயாரிப்புகளை காட்ட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்று ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, லம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.