dark_mode
Image
  • Tuesday, 07 October 2025

ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு: தீபாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை அலுவலகம்..!

ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு: தீபாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை அலுவலகம்..!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வருமான வரி வழக்கு தொடர்பாக, அவரது வாரிசான ஜெ. தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், தீபா தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி சுமார் ₹36 கோடி என வருமான வரித்துறை மதிப்பிட்டது. இந்த தொகையை செலுத்தும்படி ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசான ஜெ. தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு விசாரணையின்போது, வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், செலுத்த வேண்டிய வரித் தொகை ₹36 கோடியில் இருந்து ₹13 கோடியாக குறைத்து திருத்தி அமைக்கப்பட்ட நோட்டீஸ் தீபாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
 
 
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், தீபா தொடர்ந்திருந்த இந்த வழக்கு செல்லாது என கூறி, அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

related_post