dark_mode
Image
  • Friday, 07 March 2025

சீமானை கைது செய்ய போலீசார் திட்டம் – பரபரப்பு தகவல்!

சீமானை கைது செய்ய போலீசார் திட்டம் – பரபரப்பு தகவல்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தார். எனினும், அவர் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த சுற்றுப்பயணத்தில் இருப்பதால், இன்று ஆஜராக முடியாது என தனது வழக்கறிஞர்களின் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் சீமான் மீது கைது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி, திருமண வாக்குறுதியை மீறி பாலியல் வன்முறை செய்ததாக 2011 ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். எனினும், நீதிபதி இளந்திரையன், பலாத்கார புகார் என்பது தீவிரமானது; புகார் வாபஸ் பெற்றாலும், போலீசாருக்கு விசாரணை செய்ய அதிகாரம் உண்டு என தெரிவித்தார். அதன்படி, 12 வாரங்களில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

 

இந்த வழக்கின் தொடர்ச்சியாக, போலீசார் பெங்களூரில் வசிக்கும் விஜயலட்சுமியிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி, புதிய ஆதாரங்களை பெற்றுள்ளனர். சீமான், இன்று காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை என்பதால், போலீசார் அவரை கைது செய்து, ஆண்மை பரிசோதனை நடத்தும் நடவடிக்கையை திட்டமிட்டுள்ளனர்.

 

மேலும், சீமான், தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசியதாக, அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள், ராயப்பேட்டையில் உள்ள லாட்ஜில் தங்கி, சீமான் வீட்டிற்கு செல்ல முயன்றபோது பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 3 பெட்ரோல் குண்டுகள் மற்றும் தயாரிப்பு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

சீமான் தொடர்பான இந்த விவகாரங்கள், தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

comment / reply_from

related_post