சிறையிலிருந்து வெளியே வந்தார் ஸ்வப்னா சுரேஷ்..!

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேசுக்கு, சமீபத்தில் உயர் நீதிமன்றம் 'ஜாமின்' வழங்கியது.இதையடுத்து, 16 மாதங்களாக திருவனந்தபுரம் அட்டகுளங்கரா பெண்கள் சிறையில் விசாரணை கைதியாக இருந்த ஸ்வப்னா இன்று விடுவிக்கப்பட்டார்.
அவரது தாய் பிரபா, உயர் நீதிமன்ற உத்தரவை சிறையில் தாக்கல் செய்து மகளை அழைத்து சென்றார். சிறைக்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஸ்வப்னா பதில் அளிக்கவில்லை.
