dark_mode
Image
  • Wednesday, 23 July 2025

கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்.. கறார் வேண்டாம்.. சொத்து வரி குறித்து தமிழக அரசு அறிவுறுத்தல்?

கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்.. கறார் வேண்டாம்.. சொத்து வரி குறித்து தமிழக அரசு அறிவுறுத்தல்?
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், சொத்துவரி வசூலில் கரார் காட்ட வேண்டாம் என்றும், பொதுமக்கள் தாங்களாக முன்வந்து செலுத்தினால் மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், வரி செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் தமிழக அரசு மாநகராட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  
 
 
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சொத்து வரியை கட்டாயப்படுத்தி வசூலிக்காமல், மக்கள் செலுத்தினால் மட்டும் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.
 
சென்னை மாநகராட்சி ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.2,000 கோடி சொத்துவரி வசூலித்து வருகிறது. இந்த வரியை வசூலிப்பதில் மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நோட்டீஸ் அனுப்புவது உட்பட பல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இந்த சூழலில்தான், வரவிருக்கும் தேர்தலை ஒரு காரணமாக கொண்டு இந்தத் தளர்வு அறிவுறுத்தல்கள் வந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
 
இது, தேர்தலை மனதில்கொண்டு எடுக்கப்பட்டுள்ள தற்காலிக நடவடிக்கை என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் வழக்கமான வரி வசூல் நடைமுறைகள் கடுமையாக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

related_post