காசி தமிழ் சங்கமத்தை பாஜக உரிமை கொண்டாட முடியாது - கே.எஸ்.அழகிரி!
உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை காசியில் பல்வேறு துறை அமைச்சர்களாலும் அதிகாரிகளாலும் செய்தனர்.
நாடே திரும்பி பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் இருந்து 12 பிரிவுகளில் 2500 பேர் காசிக்கு 8 நாள் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
துவக்க விழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியுடன் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், காசி தமிழ் சங்கமத்தை பாஜக உரிமை கொண்டாட முடியாது என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்தாவது, "தமிழ்நாடு அறநிலையத்துறை செலவு செய்து 200 பேரை காசிக்கு அனுப்பியுள்ளது. நியாயமாக தமிழ்நாடு அரசுக்கு தான் பெருமை சேரும்"
பாஜக இதில் உரிமை கொண்டாட நினைப்பது வாடகை வீட்டுக்கு உரிமை கொண்டாடுவது போல் ஆகும்" என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.