கர்நாடகா | சிறுவனின் கன்னத்தில் ஏற்பட்ட காயம் - தையல் போடாமல் ஃபெவிக்விக் தடவிய செவிலியர் சஸ்பெண்ட்

கர்நாடகா மாநிலம் ஹாவேரி அருகே கன்னத்தில் காயம் அடைந்த 7 வயது சிறுவனுக்கு தையல் போடாமல் ஃபெவிக்விக் தடவப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஹாவேரி மாவட்டம், ஹனகல் தாலுகாவில் உள்ள அடூர் ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் ஜோதி என்கிற செவிலியர், 7 வயது சிறுவனின் கன்னத்தில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக் பசையைப் பூசி அனுப்பியுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஜனவரி 14ம் தேதி நடந்துள்ளது.
விளையாடும்போது கன்னத்தில் காயம் ஏற்பட்டதால், குருகிஷன் அன்னப்ப ஹோசமணி என்ற 7 வயது சிறுவனை சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்காமல் செவிலியர் ஜோதி என்பவர், காயத்திற்கு தையல் போடுவதற்குப் பதிலாக, ஃபெவிக்விக் தடவி அனுப்பியுள்ளார்.
இந்த செயல் குறித்து சிறுவனின் பெற்றோர் செவிலியரிடம் கேள்வி கேட்டுள்ளனர். அப்போது காயம் சிறியதாக இருந்தது, மேலும் தையல் போட்டால் தழும்பு ஏற்பட்டும் என்பதால் ஃபெவிக்விக் பயன்படுத்தியகாவும், பல ஆண்டுகளாக நான் காயத்திற்கு ஃபெவிக்விக் பயன்படுத்துவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுவனின் பெற்றோர் செவிலியரின் பதிலை வீடியோவாக பதிவுசெய்து, அடூர் ஆரம்ப சுகாதார மையத்தின் சுகாதார பாதுகாப்புக் குழுவிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்ற மாவட்ட சுகாதார அதிகாரி ராஜேஷ் சுராகிஹள்ளி, செவிலியர் ஜோதியை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description