கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் தயாரிப்பை கண்காணிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!
ஸ்டார்மிங் ஆபரேஷன் வாயிலாக 3 ஆயிரத்திற்கும் அதிகமான ரவுடிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, தமிழகத்தில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பட்டறைகள் வாயிலாக கத்தி, அரிவாள் உட்பட தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் நிலையில், விற்பனையாளர்கள் தங்களது கடைகளில் கண்காணிப்பு கேமிராக்களை பொறுத்த வேண்டும் என தமிழக காவல் துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விற்பனையாளர்கள் தங்களின் விபரத்தை பதிவு செய்ய வேண்டும். கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் வீடு மற்றும் விவசாய பயன்பாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டால், விற்பனை செய்யப்படும் நபர்களின் விபரத்தை சேகரித்து வைக்க வேண்டும்.
குற்றப்பட்டியலில் உள்ள நபர்களின் விபரங்களை காவல் நிலையத்தில் இருந்து பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய கூடாது. காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் கத்தி, அரிவாள் உட்பட ஆயுத விற்பனை கூடத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, கண்காணிப்பு காமிரா பொறுத்த அறிவுறுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.