dark_mode
Image
  • Friday, 29 November 2024

ஓப்பன் சேலஞ்ச் விடுகிறேன்! முடிந்தால் சொல்லி பாருங்கள் - எச் ராஜா!

ஓப்பன் சேலஞ்ச் விடுகிறேன்! முடிந்தால் சொல்லி பாருங்கள் - எச் ராஜா!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோபால்பட்டியில் மத்திய பட்ஜெட் விளக்கம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியபோது, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து என்னிடம் கேள்வி கேட்டனர். அதற்கு நான் வரவேற்கிறேன் என பதில் அளித்தேன். அதுபோல் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். அதேபோல் நத்தம் இன்ஸ்பெக்டர் திமுகவின் ஒன்றிய செயலாளராக வருவதை நான் வரவேற்கிறேன். அதற்கு முன்னதாக இவர்கள் இருவரும் தங்களது யூனிஃபார்மை கழட்டி வைத்துவிட்டு பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுக கரை வேட்டி கட்டிக்கொண்டு அரசியலுக்கு வருவது நல்லது. இன்று நடைபெறும் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் தனபால் கலந்து கொள்ள கூடாது என உத்தரவிட்டது அமைச்சர் சக்கரபானியா அல்லது ஐ.பெரியசாமியா. நீங்கள் சர்க்காரிடம் சம்பளம் வாங்குகிறீர்களா அல்லது அறிவாலயத்தில் வாங்குகிறீர்களா என்று எனக்கு தெரியவில்லை. காவல்துறையினர் அவர்களது லிமிடேஷன் தெரிந்து நடந்து கொள்ளுங்கள் என்று மேடையில் பேசினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் பேசியதாவது,மத்திய பட்ஜெட்டில்தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. அதை மறைத்து, தமிழகத்திற்கு நிதி அளிக்கவில்லை என திமுகவினர் பொய்கை பரப்பி வருகிறார்கள். 1967 ஆம் ஆண்டு பொய் சொல்லி தான் ஆட்சியை பிடித்தார் அண்ணாதுரை. எம்பி தயாநிதி மாறன், கனிமொழி மக்களை வரி கட்ட வேண்டாம் என்றால் முடிந்தால் சொல்லட்டும ஓப்பன் சேலஞ்ச் விடுகிறேன். வரி கட்டினால் மட்டுமே மாநிலத்திற்கு வரியை பிரித்துக் கொடுக்க முடியும். வரி கட்ட முடியாது என்று சொன்னால் அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒன்றாகும். மேலும் கஞ்சா, சிகரெட், புகையிலை இது மாதிரியான கலாச்சாரங்கள்,மக்களும் வந்ததற்கு வந்ததற்கு திமுக தான் காரணம் . கருணாநிதி அவர்கள் தான் தமிழ்நாட்டில் மது விலக்கி நீக்கி சாராயத்தை கொண்டு வந்தார். இதனால் திமுக திருந்த வேண்டும் என வன்மையாக எச்சரிக்கிறேன் என்று பேசினார்.

எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

கரூர் மாவட்டத்தில் நில மோசடி வழக்கில் கைதாகி அண்மையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கரூர் இல்லத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார், அதிமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நிலத்திற்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் சம்பந்தம் கிடையாது. வேண்டுமென்றே திட்டமிட்டு திமுகவின் அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் இருப்பதன் காரணத்தால், அதை மறைப்பதற்காக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றார்.

ஓப்பன் சேலஞ்ச் விடுகிறேன்! முடிந்தால் சொல்லி பாருங்கள் - எச் ராஜா!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description