dark_mode
Image
  • Wednesday, 23 July 2025

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக பயன்படுத்தி வருகிறது என்றும், சிந்தூர் என்பது கணவனால் மட்டுமே ஒரு பெண்ணுக்கு கொடுக்கப்படுகிறது என்ற நிலையில், ஒரே நாடு, ஒரே கணவன் என்ற நிலையை ஏற்படுத்துகிறதா என்றும் முன்னாள் டெல்லி முதல்வர் பகவந்த் மான் சிங் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் கூறிய போது, "ஆபரேஷன் சிந்தூர்" பெயரில் பாஜக வாக்கு சேகரிக்கிறது என்றும், சிந்தூரை கேள்விக்குரிய ஒரு விஷயமாக மாற்றி உள்ளது என்றும் கூறினார்.
 
"ஒவ்வொரு வீட்டிற்கும் அவர்கள் சிந்துரத்தை அனுப்பி வைக்கின்றனர். மோடியின் பெயரால் நெற்றியில் திலகம் இட்டுக் கொள்வீர்களா? ஒரே திட்டமா என்ன?" என விமர்சித்ததார்.
 
 
இதற்கு பாஜக தரப்பில் விளக்கம் கூறிய போது, பகவந்த் மான்சிங் வரம்புகளை மீறி உள்ளார் என்றும், அவருக்கு பொறுப்புணர்வு என்பது சுத்தமாக இல்லையே என்றும், புனிதமாக கருதப்படும் சிந்தூரை கொச்சைப்படுத்தி விட்டார் என்றும் எதிராக பேசியுள்ளனர்.

related_post