dark_mode
Image
  • Friday, 07 March 2025

இளையராஜா ஒரு இசை கடவுள்,, கடவுளுக்கு கோயிலுக்கு போகணும்னு அவசியமே இல்லை: கஸ்தூரி

இளையராஜா ஒரு இசை கடவுள்,, கடவுளுக்கு கோயிலுக்கு போகணும்னு அவசியமே இல்லை: கஸ்தூரி
இளையராஜா அவர்களைப் பற்றிய சர்ச்சை குறித்து கருத்து கூறிய நடிகை கஸ்தூரி, ‘இளையராஜா என்பவர் ஒரு இசை கடவுள், கடவுளுக்கு கோயிலுக்கு போகணும்னு அவசியமே இல்லை, இளையராஜா அவர்கள் எங்க போனாலும் அவரே வந்து ஒரு கடவுள் ஒரு கோயில்தான்.

 
ஆனால் அவரை கோவிலுக்குள் விடவில்லை என்பது மாதிரி ஒரு சர்ச்சை வந்திருக்கிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிப்பட்ட பிரச்சாரங்களை வைத்து எத்தனை நாளுக்கு தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.

கருவறைக்குள்ள எந்த ஜாதியும் போக முடியாது, அது ராஜா சாராக இருந்தாலும் சரி கஸ்தூரியாக  இருந்தாலும் சரி.  கருவறைக்குள் எந்த ஜாதியாக இருந்தாலும் சரி பிராமினாக இருந்தாலும் சரி கருவறைக்குள் போக முடியாது.

 
கருவறைக்குள்ள அர்ச்சகர்கள் மட்டும் தான் போக முடியும், தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், அப்போ அர்ச்சகர்கள் எந்த ஜாதியா இருந்தாலும் போக முடியும், அவ்வளவுதான் மேட்டர். இதை வைத்து திரித்து பேசும் இந்த  வன்ம போக்கை கண்டித்து தான் நவம்பர் 3ஆம் தேதி நான் பேசினேன்’ என்று கஸ்தூரி தெரிவித்தார்.
இளையராஜா ஒரு இசை கடவுள்,, கடவுளுக்கு கோயிலுக்கு போகணும்னு அவசியமே இல்லை: கஸ்தூரி

comment / reply_from

related_post